×

போரில் பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துகள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்: G7 நாடுகள் வலியுறுத்தல்

ஈரான் போரில் பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என G7 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். சாமானிய மக்களை பாதிக்கும் எரிபொருள், வணிக விநியோகம் மற்றும் வர்த்தக போக்குவரத்துப் பாதிப்புகளை குறைக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி/ கூட்டமைப்புக்கு பிரான்ஸ் நடப்பாண்டு தலைமை வகிக்கிறது. இதையொட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸை அடுத்த சொனே லா வில்லே பகுதியில் ஜி7 வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரான்ஸின் சிறப்பு அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிரேஸில், தென் கொரியா, சவூதி அரேபியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அண்டை நாடுகள், பொதுமக்கள் மற்றும் மிக முக்கியமான அரசு உள்கட்டமைப்புகள் மீது மத்திய கிழக்கு போர் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைக்க வேண்டியது அவசியம் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். போர் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவுகளைச் சமாளிக்க வேண்டும். குறிப்பாக, சாமானிய மக்களைப் பாதிக்கும் எரிபொருள், உரம், வணிக விநியோகம் மற்றும் வர்த்தக போக்குவரத்துப் பாதிப்புகளைக் குறைக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் செல்வதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : G7 ,G7 alliance ,Iran war ,
× RELATED 12 டன் எடையுள்ள KitKat சாக்லேட்கள் திருட்டு