×

நேபாளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற’Gen Z’ போராட்டங்களை கொடூரமாக ஒடுக்க முயன்றதாக முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது!!

நேபாளம்: நேபாளத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற’Gen Z’ போராட்டங்களை கொடூரமாக ஒடுக்க முயன்றதாக நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலியை காவல்துறை கைது செய்த‌து. புதிதாக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா அரசு, விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று அதிகாலை அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேபாளத்தில் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற 24 மணிநேரத்திற்குள் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது சுமார் 77 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக முன்னாள் பிரதமர் ஒலி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதே வழக்கில் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் லேக்காக் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். நேபாளத்தின் தேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Prime Minister Sharma Sound ,Gen Z ,Nepal ,Balendra Shah government ,Commission of Inquiry ,
× RELATED பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 1 முதல் 4...