×

சிலிண்டர் தட்டுப்பாடு: தூத்துக்குடி ஹோட்டலில் விறகு அடுப்பு வைத்து சமையல்

 

தூத்துக்குடி: வணிக ரீதியிலான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள சிறிய ஹோட்டல்கள், டீ கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்கள் மெனுவைக் குறைத்து, விறகு அடுப்புக்கு மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதேபோல் தூத்துக்குடி பூபல்ராயபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஹோட்டலில் பிரியாணி செய்வதற்காக விறகு அடுப்பு வைத்து சமையல் செய்கின்றனர். அதில் அடுப்பில் வீசுவதற்காக ஃபேன் வைத்து வீசுகின்றனர். இதனால் வேலை பார்க்கும் தொழிலாளிகள் ரொம்பவும் சிரமப்படகின்றனர். எப்போது சிலிண்டர் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags : Thoothukudi ,Chennai ,Middle East ,
× RELATED மாவட்ட மக்களுக்கு 84 ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருக்கும் ரயில்வே திட்டம்