×

சென்னையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படவில்லை: தேர்தல் அதிகாரி குமரகுருபரன்

 

சென்னை: சென்னையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பம் வழங்கினால்தான் விஜய் பரப்புரைக்கு அனுமதி தர முடியும். கூட்டத்துக்கு ஒரு நாள் முன்பு அனுமதி கோரினால் தர இயலாது; 48 மணி நேரத்துக்கு முன்பு கொடுக்க வேண்டும். தேர்தல் பரப்புரை, பிரச்சார கூட்டம் உள்ளிட்ட அனைத்துக்கும் அனுமதி கோரி ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் வாயிலாக அரசியல் கட்சியினர் பரப்புரைக்கு விண்ணப்பித்து அனுமதி பெறுகின்றனர். காவல்துறை அனுமதித்த இடங்களை தவிர வேறு இடங்கள் கேட்டால் அவற்றிற்கு அனுமதி கொடுப்பதில்லை. அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும். உரிய ஆவணங்களை இணைக்காமல் பரப்புரை செல்வதாகக் கூறி வெறும் பேப்பர் மட்டும் தந்தால் அனுமதி தர முடியாது. முறையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்பட்டு அனுமதி தரப்படும் என்று கூறினார்.

Tags : Vijay ,Chennai ,Kumaragurubaran ,Election ,Kumaraguroparan ,
× RELATED சிவகாசி அருகே விசுவநத்தத்தில்...