×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஆந்திர தொழிலாளி உறுப்பு தானம்

 

தண்டையார்பேட்டை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சுள்ளூர்பேட்டை மண்டலம் கோட்டா போலூர் பகுதியை சேர்ந்தவர் முனிந்திரா (47). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 25ம்தேதி பணியில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சுள்ளூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக அன்றிரவே ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசுக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி முனிந்திரா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த முனிந்திராவின் உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் விளக்கி கூறினர்.

இதற்கு சம்மதம் தெரிவித்த முனிந்திராவின் மனைவி முனெம்மா, மகள் முனியம்மா, மகன் விஜயகுமார் மற்றும் மருமகன் சுப்பிரமணி ஆகியோர் அனுமதியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல்கள், தோல் மற்றும் கண் கார்னியா போன்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புக்காக காத்திருப்போருக்கு தானமாக வழங்கப்பட்டது. இதற்காக முனிந்திரா வின் உறவினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags : Stanley Government Hospital ,Thandaiyarpettai ,Munindra ,Kota Bolur ,Sullurpettai ,Nellore district ,Andhra Pradesh ,
× RELATED சிவகாசி அருகே விசுவநத்தத்தில்...