×

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு ஏப்ரல் 6 வரை நீட்டிப்பு

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போரில், தற்போது ஒரு சிறிய இடைவேளை ஏற்பட்டுள்ளது.

ஈரானின் கோரிக்கையை ஏற்று, அந்த நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை பத்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே மார்ச் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது அந்த அவகாசம் ஏப்ரல் 6, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது; ஈரான் அரசின் வேண்டுகோளின்படி ஏப்ரல் 6, திங்கட்கிழமை இரவு 8 மணி வரை தாக்குதல்கள் இடைநிறுத்தம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : US ,President ,Trump ,Iran ,Strait of Hormuz ,Washington ,Middle East ,Israel ,Supreme Leader ,Ali Khamenei ,
× RELATED பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.10 குறைத்தது ஒன்றிய அரசு!