×

ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணம் செய்ய ஈரான் அரசுக்கு 2 கப்பல்கள் கட்டணம் செலுத்திவிட்டுச் சென்றுள்ளன

தெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணம் செய்ய ஈரான் அரசுக்கு 2 கப்பல்கள் கட்டணம் செலுத்திவிட்டுச் சென்றுள்ளன. எந்த நாட்டு கப்பல், எத்தனை ஊழியர்கள் உள்ளனர், என்ன சரக்கு, எங்கு செல்கிறது என்ற விவரத்தை வழங்க வேண்டும். கப்பல் குறித்த விவரம் கிடைத்தவுடன் ஈரான் புரட்சிப் படை அதிகாரிகள், ஹோர்முஸ் வழியே செல்ல அனுமதியளிப்பார்கள். ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்க கப்பல் ஒன்றுக்கு 20 லட்சம் டாலர்(ரூ.19 கோடி) கட்டணமாக ஈரான் நிர்ணயித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை கடக்க கப்பல்களில் கட்டணம் வசூலிக்க சட்டம் இயற்ற ஈரான் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்பில்லாத சில கப்பல்களுக்கு வழித்தடம் அமைக்க ஈரான் பரிசீலித்து வருகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், ஈராக், மலேசியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள், தங்களது எண்ணெய்க் கப்பல்கள் பாதுகாப்பாகச் சென்றுவருவதை உறுதி செய்வதற்காக இஸ்லாமியக் குடியரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

Tags : Iran ,Strait of Hormuz ,TEHRAN ,STRAIT OF ,HORMUZ ,
× RELATED தாமரை சின்னத்தில் போட்டியிடும்...