அந்தியூர்,மார்ச்27: அந்தியூர் பஸ் நிலையத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மாவட்ட தேர்தல் நடந்த அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கந்தசாமி தலைமையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கிராமிய கலைக்குழுவின் ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், இசைக்கு ஏற்ப நடனமாடும் நாட்டிய குதிரைகள் மூலம் வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற 100% வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன்,பேரூராட்சி அலுவலர் சதாசிவம் மற்றும் 14 ஊராட்சிகள், பேரூராட்சி பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
