×

உள்ளாட்சி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் சம்மேளன மாநிலக்குழு வலியுறுத்தல்

திருச்சி, மார்ச் 27: தமிழ்நாடு உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் நடராஜன் தலைமையில் திருச்சி மிளகுபாறையில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர்கள் ஆறுமுகம், சின்னசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் திருச்சி சுரேஷ், கோயமுத்தூர் செல்வராஜ், டாக்டர் சாந்தி, மீனாள் சேதுராமன், சங்கையா, தருமபுரி மணி, அரியலூர் தண்டபாணி, மதுரை முருகன் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேனி மாவட்டம், கம்பத்தில் கடந்த 13 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்த தூய்மை பணியாளர் மணிகண்டன் (36) என்பவர் கடந்த 16ம் தேதி எதிர்பாராமல் இறந்ததையடுத்து குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அவரது மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என்றும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசாணை 62ன்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், எல்லாவித ஒப்பந்த முறைகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags : Tamil Nadu Local Government Employees' Federation ,Trichy ,Meppakaparai, Trichy ,Natarajan ,General Secretary ,Ramachandran ,AITUC ,Arumugam, ,Chinnaswamy ,Trichy Suresh ,
× RELATED விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து...