திருவெறும்பூர், மார்ச் 27: விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கி ப்பட்டியில் கடந்த 4ம்தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பின்போது விஜய் பயணித்த பேருந்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய திருச்சி மேல கல்கண்டார் கோட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ், சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 23 அன்று சிகிச்சைக்கு பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று இறந்த விக்னேஷின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
