×

ஏழு மீனவர்கள் சிறைப்பிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 365 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இரவில் இந்திய கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதையெடுத்து மீனவர்கள் வேறு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை அப்பகுதிக்கு சென்று மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தது. ஆனால் கடற்படையிடம் சிக்காமல் இருக்க வலைகளை கடலில் வெட்டி விட்டு சில படகுகள் தப்பின. எனினும் விரட்டிய இலங்கை கடற்படை ரோந்து கப்பலை கொண்டு, மீன்பிடி படகை முட்டி கடலில் மூழ்கடித்தது. மற்றொரு படகை சிறைபிடித்து 7 மீனவர்களை கைது செய்தனர்.

Tags : RAMESWARAM ,SEA ,Indian Sea border ,Sri Lankan Navy ,
× RELATED குற்றவாளியிடம் பறிமுதல் செய்த...