×

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி பாஜவிற்கு ‘தாரை வார்ப்பு’: அதிமுகவினர் அதிருப்தி

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி இதுவரை 15 பொதுத் தேர்தல்களையும், 2 இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது. அதில் விவசாய தொழிலாளர் கட்சி ஒருமுறையும், காங்கிரஸ் இருமுறையும், அதிமுக 6 முறையும், திமுக 8 முறையும் வென்றுள்ளன. ஜெயலலிதாவுக்கு தேர்தல் பணியில் முதல் வெற்றியை ஈட்டிய திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக போட்டியிடாமல் பாஜவுக்கு இப்போது ஒதுக்கிவிட்டதே என்ற ஆதங்கம் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் முதன்முறையாக திருச்செந்தூரில் போட்டியிடும் பாஜவுடன் இணைந்து அதிமுகவினர் தேர்தல் பணியாற்றுவார்களா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

சரத்குமாருக்கு வாய்ப்பா?
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், திருச்செந்தூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 26,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது அவர் சமகவை கலைத்துவிட்டு பாஜவில் ஐக்கியமாகியுள்ளார். சேர்ந்து 2 வருடமாகியும் பாஜவில் அவரை சீண்டுவார் யாருமில்லை. இதனால் தன் அதிருப்தியை அவர் வெளிப்படையாக கூறி வருகிறார். இதனால் சரத்குமாருக்கு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆறுமுகநேரியைச் சேர்ந்த கேஆர்எம்.ராதாகிருஷ்ணன் 25,263 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் தோல்வியடைந்தார். தற்போது அவர் பாஜகவில் இணைந்து விட்டார். அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காகவே கடந்த சில மாதங்களாக குபேர பூஜை, விளக்கு பூஜை போன்றவற்றை நடத்தி பாஜகவின் தலைமையிடம் சீட் கேட்டுள்ளார். எனவே அவருக்கே இம்முறை வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Tags : Thiruchendoor Assembly Constituency ,TRICHENDUR ASSEMBLY CONSTITUENCY ,Agrarian Labour Party ,Congress ,Atamuka ,Dimuka ,Jayalalithaa ,
× RELATED கோயில் இடத்தில் வைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம் அகற்றம்