×

கொளுத்தும் கோடை வெயில்; அகரம் கிராமத்தில் மண்பானை வனையும் பணி தீவிரம்: பானை செய்யும் இயந்திரத்தை அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு

 

ஊத்துக்கோட்டை: கோடை வெயில், அக்னி நட்சத்திரம் ஆரம்பமாக உள்ளதால், அகரம் கிராமத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் பானைகள் செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமான ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பானை செய்யும் இயந்திரத்தை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். வருகின்ற மே4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி 28ம் தேதி முடிவடைகிறது. ஆனால், தற்போதே அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால், வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது. இதனால், மக்கள் இளநீர், மோர், பழ ஜூஸ்கள், கூழ், குளிர்பானங்கள் ஆகியவைகளை அருந்தி உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.

வசதி படைத்தவர்கள் வீடுகளில் குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் வைத்து அதை குடித்து வருகிறார்கள். ஆனால், ஏழை, எளிய மக்களுக்கு என்றுமே ‘மண் பானை’ தான் குளிர்சாதனப் பெட்டி. இதில், தண்ணீர் பருகினால் எந்தவித நோயும் தாக்காது. இதனால் மண் பானை தண்ணீரையே மக்கள் பெரிதும் பயன்படுத்துவார்கள். இந்நிலையில், பெரியபாளையம் அருகே அகரம், ஆரணி, தண்டலம் மற்றும் ஊத்துக்கோட்டை கலைஞர் தெரு, பேருந்து நிலையம் எதிரிலும், ஊத்துக்கோட்டை அருகே புதுகுப்பம், பாலவாக்கம் போன்ற பகுதிகளிலும் மண்பாண்ட தொழிலாளர்கள் கோடை வெயிலுக்காக மண்பானைகள் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘கோடைக்கு தொடங்குவதற்கு 2 மாதத்திற்கு முன்பே எங்களுக்கு பானைகள் செய்வதற்காக ஆர்டர்கள் கிடைக்கும். ஆனால், இந்த முறை தற்போது தான் பானைகள் செய்ய ஆர்டர் வர தொடங்கியுள்ளது. இங்கிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பானைகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிச்செல்வார்கள். ஒரு பானையின் விலை ரூ.50 முதல் ரூ.200 வரை வித விதமாக விற்பனையாகும். எனவே, தமிழ்நாடு அரசு பானை செய்யும் இயந்திரம் வழங்க வேண்டும். மேலும், அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாணியம் வழங்க வேண்டும் என கூறினர்.

Tags : Agaram village ,Uthukkottai ,
× RELATED உங்களால் பாதிக்கப்பட்ட பெண்களிடம்...