டெல்லி: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில், சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேரளம் செல்வார் என காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது. கேரள சட்டசபை தேர்தலையொட்டி கோழிக்கோடு மலப்புரம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் இன்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கோழிக்கோடு பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் மாலை 4.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் ராகுல் வரவேற்க கேரள காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென சுற்றுப்பயணத்தை ராகுல் ரத்து செய்தார். தனது தாயார் சோனியா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதால், ராகுலின் பயணம் ரத்து செய்துள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக டெல்லி கங்கா மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். கோழிக்கோடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் ராகுலுக்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றுவார் என்று குறிப்பிடத்தக்கது.
