×

2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமனம்!

கொல்கத்தா: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை(மார்ச் 28) தொடங்க உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சீசனில் சில அணிகள் தங்களது புதிய கேப்டன் மற்றும் துணை கேப்டன்களை நியமித்து வருகிறது.

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்த 8 ஆண்டுகளாக விளையாடி வரும் ரிங்கு சிங், தற்போது அந்த அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2018-ஆம் ஆண்டு அறிமுகமான போது வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், கடுமையான உழைப்பிற்குப் பிறகு அணியின் தவிர்க்க முடியாத பினிஷராக உருவெடுத்துள்ளார்.

இதுவரை 51 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரிங்கு சிங், 145 ஸ்டிரைக் ரேட்டுடன் 1,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். இதில் 4 அரைசதங்கள், 56 சிக்ஸர்கள் மற்றும் 87 பவுண்டரிகள் அடங்கும்.

சமீபத்தில் தனது தந்தையை இழந்த சோகம் மற்றும் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட பின்னடைவு எனப் பல சவால்களைச் சந்தித்த போதிலும், கேகேஆர் நிர்வாகம் அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இந்த முக்கியப் பொறுப்பை வழங்கியுள்ளது. அனுபவ வீரர் அஜிங்க்யா ரஹானே தலைமையின் கீழ், வரும் 19-வது சீசனில் ரிங்கு சிங் தனது புதிய பொறுப்பில் களமிறங்கவுள்ளார்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. வரும் 29ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Tags : Ringu Singh ,Kolkata Team ,2026 ,IPL Series ,Kolkata ,IPL ,
× RELATED 2 ஐபிஎல் டீம் சேல் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.15,300 கோடி பெங்களூரு அணி ரூ.16,706 கோடி