வடமதுரை, மார்ச் 25: வடமதுரை போலீசார் நேற்று தென்னம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் கிராவல் மண் கடத்தியது லாரி டிரைவர் சாணார்பட்டி அருகேயுள்ள பாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜா (26) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
