×

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏப்.1 முதல் நீச்சல் பயிற்சி வகுப்பு

மதுரை, மார்ச் 25: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள நீச்சல்குளத்தில், ஏப்ரல் 1 முதல் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது. இதில் 7 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கோடை காலத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை, ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

ஏப்.1 முதல் ஜூன் 14 வரை 5 கட்டங்களாக இந்த வகுப்புகள் நடக்கிறது. இதில் சிறுவர், சிறுமியர், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 7 வயதிற்கு மேற்பட்ட 120 செ.மீ உயரம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். காலை 7.30 மணி 9.30 வரை இரு பிரிவுகள் மற்றும் மாலை 3.30 மணி முதல் 5.30 வரை மேலும் இரு பிரிவுகளாக நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். காலை 11 மணி முதல் 12 மணி வரை பெண்களுக்கு மட்டும் வகுப்பு நடத்தப்படும். இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் விளையாட்டரங்கிற்கு நேரில் வந்து க்யூஆர் கோடு மூலம் ரூ.1770 கட்டணம் செலுத்தி பெயர், விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

Tags : Madurai Racecourse Ground ,Madurai ,Madurai District Sports ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...