×

வளநாடு அருகே ஆக்கிரமிப்பிலிருந்து மயான பாதை மீட்பு

துவரங்குறிச்சி, மார்ச் 25: வளநாடு அருகே மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றபட்டனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வளநாடு அருகே உள்ள போலம்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதையை அப்பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக அடைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டனர்.

அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் திருச்சி கலெக்டர், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்ட ஆட்சியர், மருங்காபுரி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மனு அளித்ததின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பில் இருந்த மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த முள் வேலியை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையை மீட்டனர்.

 

Tags : Valanadu ,Dhuvarankurichi ,Polampatti ,Trichy district ,
× RELATED போலி பாஸ்போர்ட் முதியவர் கைது