- நீடாமங்கலம்
- தீ
- நிலையம்
- தீயணைப்பு நிலையம்
- தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள்
- முரளி
- நீடமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் நிலையம்
- நீடமங்கலம் தீயணைப்பு நிலையம்…
நீடாமங்கலம், மார்ச் 25: நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். நீடாமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உதவி இயக்குனர் முரளி ஆய்வு செய்தார். நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் வரும் கோடை காலம் அதிக வெப்பமுடையதாக இருக்கும் என்பதால் உதவி இயக்குனர் முரளி நேரில் நிலையத்திற்கு வந்து அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு கோடை காலத்தை எதிர்கொள்ளுவதற்கும் மீட்பு பணிகளில் சிறப்புடன் ஈடுபட்டு நல்ல முறையில் பணியாற்றவும் பல விதமான அறிவுரைகள் வழங்கினர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு பல புதிய நவீன உபகரணங்களை வழங்கி அவற்றை பயன்படுத்தும் முறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. மேலும் புகை சூழ்ந்த இடங்களில் சிறப்பாக பணியாற்றும் வகையில் புதிய மூச்சுக் கருவிகள் வழங்கப்பட்டது.
