×

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அறிவிப்பு

தஞ்சாவூர், மார்ச் 25: தமிழர் தேசிய முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் தலைவர் முத்தமிழ் மணி தலைமையில் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் தமிழ்மணி நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். பின்னர் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

முடிவாக தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாட்டின் நலன்கள், தமிழ் மொழிக்கு எதிராக இந்தி, சமஸ்கிருத திணிப்புகள், தமிழ் தேசியம் மற்றும் மொழி வழி தேசிய உணர்வுகளை அடக்கி ஒடுக்குவது, இந்து மதவாத தேசியத்தை தூக்கி பிடிக்கும் பாஜ பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த பேரபாயத்தை முறியடிக்க வேண்டியது தமிழர்களின் முதன்மையான கடமையாகும்.

எனவே ஜனநாயக கடமையை நிறைவேற்றும் நோக்கத்துடன் பாஜ கூட்டணியை முறியடிக்கும் வகையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து, வாக்களிக்க தமிழ்நாட்டு மக்கள் முன்வருமாறு தமிழர் தேசிய முன்னணி கேட்டுக் கொள்கிறது என்ற முடிவினை பழ.நெடுமாறன் அறிவித்தார்.

கூட்டத்தில் துணைத் தலைவர்கள் அயானாபுரம் முருகேசன், காரைக்குடி ராமன், வழக்கறிஞர் பானுமதி, நிர்வாகிகள் ஆத்மநாதன், பொறியாளர் கென்னடி, தஞ்சை மாவட்ட தலைவர் பொன்.வைத்தியநாதன், மாவட்ட செயலாளர், முருகையன், மாவட்ட நிர்வாகி முத்துகிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பேராசிரியர் முரளி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : DMK ,Tamil National Front ,Pazhal Nedumaran ,Thanjavur ,Thanjavur Pesantren ,Muthamizh Mani ,General Secretary ,Tamilmani ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...