×

சீர்காழியில் மூளைசாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்

சீர்காழி, மார்ச் 25: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் கமலக்கண்ணன். இவரது மாமியார் புளிச்சக்காட்டில் வசிக்கும் ஜெயா (53) என்பவர் அவரது கணவருடன் கடந்த 21ம் தேதி எருக்கரில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவரது சேலை வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மூளை சாவு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருடைய உடல் உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் நேரில் சென்று ஜெயாவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார். அப்போது தலைமையிடத்து தனி துணை தாசில்தார் பாபு கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தார்.

 

Tags : Sirkazhi ,Kamalakannan ,Sirkazhi Taluk Office ,Mayiladuthurai district ,Jaya ,Pulichakkat ,Erukkar ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...