×

குமிளங்காடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாத விழா

கொள்ளிடம், மார்ச் 25:கொள்ளிடம் அருகே குமிளங்காடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாத விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த சுயம்பு ஆதிநாகாத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு தனியாக பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. வருடம் தோறும் நடைபெறும் பங்குனி மாத விழா நேற்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு பத்ரகாளி அம்மனுக்கு 50க்கும் மேற்பட்ட வகையிலான இனிப்பு பண்டங்கள் வைத்து படையிலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் தெய்வேந்த அடிகளார் மற்றும் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.

 

Tags : Panguni month festival ,Kumilangadu Bhadrakali Amman temple ,Kollidam ,Suyambhu Adhinagarathamman ,Kumilangadu ,Mayiladuthurai district ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...