×

மேலபெரும்பள்ளம் வாக்குசாவடி மையத்தில் பொதுபார்வையாளர் ஆய்வு

தரங்கம்பாடி, மார்ச் 25: தரங்கம்பாடி வட்டம் மேலபெரும்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வாக்குச்சாவடி மையத்தை பூம்புகார் சட்டமன்ற தொ குதி பொது பார்வையாளர் நேற்றுமுன்தினம் பார்வையிட்டு அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணை யத்தால் சட்டமன்ற பொது த்தேர்தல் – 2026 தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 15 ம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரையும், ஏப்ரல் 7 வேட்பு மனுக்கள் பரிசீலனையும், வேட்பு மனு திரும்ப பெறுதல் ஏப்ரல் 9ம் தேதியும், வாக்குப் பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே4 தேதி என தேர்தல் நடைமுறைகள் முடிவு பெறும். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய்குமார் சிங் யாதவ் வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டு அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்றுமுன்தினம் தரங்கம்பாடி வட்டம் மேலபெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தை தேர்தல் பொதுப்பார்வையாளர் சஞ்சய்குமார் சிங் யாதவ் பார்வையிட்டு, வாக்காள ர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, சாய்தள வசதிகள், மின் இணைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.

 

Tags : Melaperumpallam polling station ,Tharangambadi ,Poompuhar Legislative Assembly ,Melaperumpallam Panchayat Union Primary School ,Election Commission of India ,Legislative Assembly ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...