×

பாலியல் குற்றச்சாட்டு ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் விலகல்

பெங்களூரு: ஐபிஎல் 19வது சீசன் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஆர்சிபி அணி வீரர்கள் கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் முன்னிலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளர். க்ருணால் பாண்டியா, ஜித்தேஷ் சர்மா, சுயாஷ் சர்மா மற்றும் புவனேஸ்வர் கமார் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் கடந்த 18ம் தேதி முதல் நடந்து வரும் இந்த பயிற்சி முகாமில் கடந்த சீசனில் 13 விக்கெட்களை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய யாஷ் தயாள் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து அந்த அணியின் இயக்குநர் மோபோபாட் கூறுகையில், யாஷ் தயாள் தனிப்பட்ட சில பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளதால் இந்த சீசனில் அவர் அணியில் இணைய மாட்டார். இருப்பனும் அவர் தொடர்ந்து எங்களது ஒப்பந்த வீரராக இருப்பார் என்றார்.

யாஷ் தயாள் மீது கடந்த ஆண்டு காசியாபாத்தில் 2 வழக்குகளும் ஜெய்ப்பூரிலுள்ள சங்கனேர் சதார் காவல் நிலையத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும் பதியப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் ஆர்சிபி அணி இந்த முடிவை எடுத்துள்ளது.

Tags : RCB ,Yash Dayal ,Bengaluru ,IPL ,Rajat Patidar ,Andy Flower ,Krunal Pandya ,Jitesh Sharma ,Suyash Sharma ,
× RELATED 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமனம்!