புதுச்சேரி: புதுச்சேரியில் 3 தொகுதிகளில் மட்டும் விசிக தனித்து போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை தொகுதிகளில் வி.சி.க தனித்துப் போட்டி; புதுச்சேரியில் 3 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு விசிக ஆதரவளிக்கும். மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
