×

ஏர் ஹாரனால் அவதி

 

திண்டுக்கல், மார்ச் 24: சாலைகளில் செல்லும் போது அதிக ஒலி எழுப்பி பொதுமக்களின் காதுகளை பதம் பார்க்கும் ஏர் ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடை உத்தரவை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலைகளில் செல்லும் மற்ற வாகனஓட்டிகள், பாதசாரிகள் ஏர்ஹாரன் எழுப்பும் அதிக ஒலியால் அதிர்ச்சி அடைகின்றனர். குறிப்பாக டூவீலரில் செல்வோரில் சிலர் அதிர்ச்சியில் கீழே விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கிறது. மேலும் குறிப்பாக ரத்த அழுத்தம் உடையோர், கர்ப்பிணிகள், இருதய நோயாளிகள், குழந்தைகள் ஏர் ஹாரன்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Dindigul ,Dindigul district ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...