×

ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

 

வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் மின், எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது. தொடரும் பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஈரான் இடையேயான பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடைபெற்று வருகிறது. ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா தனது போர் நடவடிக்கைகளை தீவிரம் காட்டி வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவானது. அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, ஈரானுக்கு ஆதரவான குழுக்கள் உலகெங்கும் உள்ள அமெரிக்க குடிமக்கள் மற்றும் அந்நாட்டு தூதரகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்தது.

தற்போது நிகழும் போர் ஓர் இரவுக்குள் தொடங்கிவிடவில்லை. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே பல தசாப்தங்களாக இருந்த முன்பகையில் இருந்து உருவானது. குறிப்பாக, ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டங்களாலும், ஈரான் பிராந்தியத்தில் செல்வாக்கு பெற்றதாலும், இந்த போர் தீவிரமடைந்தது. இரு நாடுகளும் மறைமுகமாக மோதிக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த 2024ஆம் ஆண்டு நேரடியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதால் பதற்றம் உருவானது.

இஸ்ரேல், ஈரான் இடையே மறைமுகமாக மோதல்கள் தொடர்ந்து வந்தாலும், கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம், ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ உள்கட்டமைப்புகள், ஏவுகணை தளங்கள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதல் நடத்தியது. ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கிய இந்த மோதல், ஜூன் மாதம் 24ம் தேதி வரை, 12 நாள்கள் நீடித்தது. இதுதான், இரு நாட்டு ராணுவமும் நேரடியாக மோதிக் கொண்ட முதல் போர்.

இந்த போரில், ஈரானில் உள்ள சுமார் 100 இடங்களை குறிவைத்து இஸ்ரேலின் 200க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூன் 22ம் தேதி, இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா, ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி பெரிய அளவிலான மோதலாக மாற்றியது.

பதிலுக்கு ஈரான் இதுரை இல்லாத அளவில் 550 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிடம் ஏவுகணை இடைமறிப்பு சாதனமான அயர்ன் டோம் போன்ற அதிநவீன பாதுகாப்பு தளவாடங்கள் இருந்தபோதிலும், ஈரானின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. இஸ்ரேல் தரப்பில் ராணுவ கட்டமைப்புகள் சேதம் அடைந்தன. உயிரிழப்புகள் ஏற்பட்டன.

ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் இணைந்து கடந்த பிப்​ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்​கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது. இஸ்​ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்​கள் உள்ள வளை​குடா நாடு​கள் மீதும் ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ஒரு ராணுவ மோதலாக தொடங்​கிய இந்​தப் போர், தற்​போது முழு அளவி​லான எண்​ணெய் அழிப்பு போராக மாறும் அச்சம் அதிகரித்துள்ளது. இதனால், எரிபொருள் விலை உயரும் அபாயம் கூடியுள்ளது.

இந்நிலையில் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து 5 நாட்கள் தாக்குதல் நடத்தப்பட மாட்டாது. தொடரும் பேச்சுவார்த்தையின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : US ,President ,Trump ,Iran ,WASHINGTON ,PRESIDENT TRUMP ,
× RELATED ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு...