பொல்லானுக்கு மணிமண்டபம் முதல்வர் அறிவிப்பு பேரவை அமைப்பினர் கொண்டாடட்டம்

ஈரோடு, பிப். 17:  சுதந்திர போராட்ட தியாகி பொல்லானின் பிறந்த நாளான டிச.,28ம் தேதி அரசு விழாவாக நடத்தப்படும் என்றும், பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை வரவேற்கும் விதமாக அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் உள்ள தந்தை பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், சண்முகம், மாவட்ட தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து பொல்லான் பேரவையின் தலைவர் வடிவேல் கூறியதாவது: பொல்லானுக்கு  மணிமண்டபம் அமைக்கவும், அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடவும் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பொல்லான் வாரிசுதாரர்களுக்கு தியாகி ஓய்வூதியம் கிடைக்கவும், விலையில்லா விவசாய நிலம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மணிமண்டபம்  அமைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது, எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>