×

பெருந்துறையில் 202 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்

ஈரோடு, பிப்.17: பெருந்துறை  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் படித்த பெண்களுக்கு திருமண நிதி  உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா, பெருந்துறை ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு பெருந்துறை ஊராட்சி ஒன்றிய  தலைவர் சாந்திஜெயராஜ் தலைமை தாங்கினார். சமூக நல மாவட்ட அலுவலர் பூங்கோதை  முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு  வெங்கடாச்சலம் கலந்து கொண்டு, 202 பெண்களுக்கு தலா 1 பவுன் வீதம், 202  நபர்களுக்கு ரூ.77 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கி  சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சிவசுப்பிரமணி, ஒன்றிய தலைவர் கணபதி, சிஎம்எஸ் துணை தலைவர் ஜெகதீஸ், மாவட்ட  ஊராட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர்  உமாமகேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்,  கூட்டுறவு சங்க தலைவர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

Tags : women ,Tali ,Perundurai ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது