×

இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும்: பியூஷ் கோயல் பேட்டி

 

சென்னை: இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக-பாஜக கூட்டணி என்பது கடந்த ஆண்டு ஜூன் மாதமே உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை என்பது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த பியூஷ் கோயலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்துவதற்காக வந்துள்ளேன். இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அனைத்து கட்சியினரும் ஒரே குடும்பமாக பணியாற்றி வருகிறோம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வளர்ந்த தேசத்துக்கு தமிழ்நாடு வளர்ந்த தமிழ்நாடு வழிவகுக்கும் என்று கூறினார்.

Tags : National Democratic Alliance ,Piyush Goyal ,Chennai ,Union Minister ,NDP ,Tamil Nadu Legislative Assembly ,BJP ,Bamaka ,
× RELATED சின்னங்களின் சுவாரஸ்ய கதைகள் தெரியுமா?