×

மது விற்றவர் கைது

 

ஏழாயிரம் பண்ணை, மார்ச் 23: ஏழாயிரம்பண்ணை சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது ஏமராஜ் கோயில் பின்புறம் உள்ள காட்டு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் அப்பனம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 13 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது : சிவகாச அருகே திருத்தங்கல்லில் தனியார் பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி ரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ் (25) என்பவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய திருத்தங்கல் அண்ணா காலனியை சேர்ந்த மருதுபாண்டி (32) என்பவரை தேடி வருகின்றனர்.

Tags : Ezhayiram Pannai ,Ezhayiram ,Pannai ,SI Raja ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...