×

இடைப்பாடி அருகே கொடூரம் வீடு புகுந்து பலாத்காரம் சிறுமி தற்கொலை: அடித்து கொன்றதாக பெற்றோர் புகார்

 

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே ஒக்கிலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் மகளான 14 வயது சிறுமி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தம்பதி வேலைக்கு சென்று விட்டதால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்(32) என்பவர், தனியாக இருந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த சிறுமி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், மகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, உடனடியாக தேவூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, சிறுமியை பலாத்காரம் செய்த சதீஷை, உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த சதீஷ் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமியின் பெற்றோர், தேவூர் போலீசில் அளித்த புகாரில் `எங்களது மகளை, சிறுமி என்று பாராமல் சதீஷ் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அவர் வெளியே சொல்லி விடுவாரோ என பயந்து, கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டுள்ளார். எனவே, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது, சதீஷ் கொலை செய்தாரா? என தெரியவரும்.

 

Tags : Midtipadi ,Okilipatti ,Idipadi, Salem District ,Government Secondary School ,
× RELATED அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் பகிரங்க மிரட்டல்!