ட்ரம்பின் 48 மணிநேர கெடுவுக்கு பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடுவோம் என மிரட்டல் விடுத்து ஈரான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரானின் அணுமின் நிலையங்கள் தாக்கப்பட்டால், அவை மீண்டும் கட்டப்படும் வரை ஹார்முஸ் நீரிணை முழுவதும் மூடப்படும் என்றும், அமெரிக்காவுக்கு இடமளிக்கும் அண்டை நாடுகளின் மின் நிலையங்களையும் தாக்குவோம் என்றும் ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
