குரும்பலூர் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு

பெரம்பலூர்,பிப்.16: பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குரும்பலூர் மற்றும் சுற்று வட்டார விவசாயிகள், பொ துமக்கள் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், திக நகர செயலாளர் அக்ரி ஆறுமுகம், கொங்கு நாடு மக்கள் தேசியக்க ட்சி மாவட்ட தலைவர் சிவா உள்ளிட்டோருடன் கலெக் டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

பெரம்பலூர் தாலுகா, குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிரிடப்படாமல் பயிரிடப்பட்டதாக போலி ஆவணம் தயாரித்து பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. நகையை வைத்து பயிர் கடன் மற்றும் உரக்கடன் வழங்கியத்தில், உரம் வழங்கி விட்டு மீதியுள்ள கடன் தொகை வழங்கப்படவில்லை. போலி ஆவணம் வைத்து கடன் வழங்கியது, செலுத்திய தொகைக்கு போலி ரசீது கொடுத்து விட்டு உண்மையான ஆவணங்களில் தொகைக்கான வரவு வைக்கவில்லை. நகை மற்றும் உரக்கடனுக்கான உறுதி மொழி கொடுத்து அதற்கான சேவை கட்டணம் வசூலித்து விட்டு தற்போது கடன் இல்லை என்பது போன்ற வகையில் பல லட்சகணக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை நிலையை அறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை கமிஷன் அமைக்க விவசாயிகள் கோரிக்கை இன்றைய  மின்தடை (காலை 9 மணி முதல் 5.30 மணி வரை)  சிறுவாச்சூர் துணை மின்நிலைய பகுதிகள்: சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டி க்குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொ ச்சியம், விஜயகோபாலபு ரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர் எசனை துணை மின்நிலைய பகுதிகள்: கோனேரிபா ளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ் சேரி, கீழக்கரை, பாப்பாங் கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாபு தூர்,வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப் பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர்.

Related Stories:

More
>