×

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்

 

புதுச்சேரி: பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழிசை பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தமிழிசை பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், தற்போது சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழிசை பெயர் இடம்பெறவில்லை. தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர்களான எல்.முருகன், அண்ணாமலை பெயர்கள் உள்ளபோதும் தமிழிசை பெயர் மட்டும் நீக்கம். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை இருந்தபோது, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Tamil Nadu ,BJP ,2024 parliamentary elections ,
× RELATED இரவுக்குள் மீதமுள்ள கட்சிகளுடன்...