- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாகுஜன்சாமஜ் கட்சி ஒற்றை போட்டி
- அம்பத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு பாகுஜனசமாஜ் கட்சி
- ஆனந்தன்
- பாகுஜன் சமாஜ் கட்சி
- தேசிய ஒருங்கிணைப்பாளர்
அம்பத்தூர்: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழக பகுஜன்சமாஜ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று மாலை அம்பத்தூரில் நடைபெற்றது. மாநில பகுஜன்சமாஜ் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான ஆனந்தன் தலைமை தாங்கினார். பகுஜன்சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் எம்பியுமான ராம்ஜி கவுதம், மத்திய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்ராவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன்சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, 2ம் கட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
இதில், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 13 மாவட்டங்களைச் சேர்ந்த 45 பேர் பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் நடைபெற்ற பகுஜன்சமாஜ் கட்சி கூட்டத்தில் முதல் கட்டமாக 45 வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். நேற்று மாலை அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில், 2ம் கட்டமாக 45 வேட்பாளர்கள் என இதுவரை மொத்தம் 90 பேர் தமிழக பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னாள் தமிழக பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பிறகு, தமிழ் மாநில பகுஜன்சமாஜ் எனும் புதிய கட்சியை அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் துவங்கி நடத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து, பழைய தமிழக பகுஜன்சமாஜ் கட்சி வழக்கறிஞர் ஆனந்தன் தலைமையில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
