×

ரூபாய் மதிப்பு கடும் சரிவு, தொழில்துறை எரிபொருள் விலை உயர்வு ஆகியவை பணவீக்கத்தின் அறிகுறிகள்: ராகுல் காந்தி

 

டெல்லி: ரூபாய் மதிப்பு கடும் சரிவு, தொழில்துறை எரிபொருள் விலை உயர்வு ஆகியவை பணவீக்கத்தின் அறிகுறிகள் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 100-ஐ நோக்கி சரிவதும், தொழில்முறை எரிபொருட்களின் (Industrial Fuel) விலை கிடுகிடுவென உயர்வதும் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல; இவை வரப்போகும் கடுமையான விலைவாசி உயர்வுக்கான தெளிவான எச்சரிக்கை அறிகுறிகள். அரசாங்கம் இதை “சாதாரணமானது” என்று கூறலாம், ஆனால் யதார்த்தம் இதுதான்:

உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs) மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும்.

வெளிநாட்டு முதலீடுகள் (FII) வேகமாக வெளியேறும், இதனால் பங்குச்சந்தை கடும் அழுத்தத்திற்கு உள்ளாகும்.

அதாவது, ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டிலும் இது நேரடியான மற்றும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி. இது வெறும் காலத்தின் கட்டாயம் – தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் (LPG) விலைகளும் உயர்த்தப்படும். மோடி அரசிடம் முறையான திசையோ அல்லது திட்டமோ இல்லை – வெறும் பேச்சுகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. கேள்வி அரசு என்ன சொல்கிறது என்பதல்ல – உங்கள் தட்டில் (உணவில்) மிஞ்சப்போவது என்ன என்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rahul Gandhi ,Delhi ,
× RELATED வடகிழக்கு மாநில எல்லையில் 3,000 உக்ரைன்...