×

கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா வருவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

கோத்தகிரி : கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் குன்னூர்-ஊட்டி நெடுஞ்சாலை, பேருந்து நிலையம், மார்க்கெட், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலை,காந்தி மைதானம் மற்றும் பேருந்துகள் செல்லும் பிரதான சாலைகள்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமீப காலமாக வளர்ப்பு கால்நடைகள் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதனால் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இது மட்டுமல்லாமல் கால்நடைகள் குன்னூர்-ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் உலா வருவதால் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.சாலையில் உலா வரும் கால்நடைகளால் 2 சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. 4 சக்கர வாகன ஒட்டிகளும் சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையம்,மார்க்கெட், காமராஜர் சதுக்கம் பகுதியில் கால்நடைகள் உலா வரும்போது பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் கீழே விழுக்கூடிய நிலை உள்ளது.

எனவே சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கால்நடைகள் உலா வராத வண்ணம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கால்நடைகளை சாலைகளில் உலா வர விடும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Kotagiri-Kunnur highway ,Kotagiri ,Nilgiri District Kotagiri Nagar Area ,Kunnur-Ooty Highway ,Bus Station ,Market ,Road to ,Revenue Collector's Office ,Gandhi Maidan ,
× RELATED ஓர் ஆண்டு காலமாக ஒன்றிய அரசின்...