×

சென்னை-போடி ரயில் வாரத்திற்கு 6 நாள் சேவை துவக்கம்: பயணிகள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி

 

போடி, மார்ச் 21: போடி-சென்னை மார்க்கத்தில் வாரத்திற்கு 6 நாளாக மாற்றப்பட்டுள்ள ரயில்சேவையை பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி-சென்னை இடையிலான ரயில் சேவை, கடந்த 2023 ஜூன் 16ம் தேதி துவங்கப்பட்டது. இந்த சேவையானது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த சேவையை வாரத்தில் கூடுதல் நாட்களாக இயக்க வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை, வாரத்தில் 6 நாட்களாக உயர்த்தி ஒன்றிய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்தப் புதிய சேவை நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

Tags : Chennai ,Bodi ,Bodi- ,Theni district ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...