×

ஊராட்சி பள்ளியில் விளையாட்டு விழா

 

காளையார்கோவில், மார்ச் 21: கீழக்கோட்டை பள்ளியின் விளையாட்டு விழா நடைபெற்றது. காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. போட்டியினை தலைமை ஆசிரியை தெய்வானை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகள் 6 முதல் 8ம் வகுப்புகள், 4 முதல் 5ம் வகுப்புகள், 1 முதல் 3ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனி தனியாக நூறு மீட்டர் ஓட்டம் சாக்கு ஓட்டம் நீளம் தாண்டுதல் குண்டு எறிதல் நினைவுத் திறன் போட்டிகள், தவளை ஓட்டம், கல் பொறுக்குதல், லக்கி கார்னர், கபடி போட்டி, கோகோ போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

Tags : festival ,Panchayat school ,Kalaiyarkovil ,Keezhakottai ,School ,Keezhakottai Panchayat Union Middle School ,Kalaiyarkovil Union ,headmistress ,Deivanai ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...