×

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு

 

சென்னை: ஒரு வாரத்திற்கு பிறகு ஆபரண தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. ஈரான்- அமெரிக்கா இடையிலான போரின் விளைவாக தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலமாக சரிவைச் சந்தித்து வந்தது. அதன்படி, வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1,17,680க்கும், செவ்வாய்க்கிழமை ஒரு சவரன் ரூ.1,17,200க்கும் விற்பனையானது. மேலும், புதன்கிழமை ரூ.1,16,560 என குறைந்தது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.2,160ம் மாலை நிலவரப்படி ரூ.3200ம் என ஒரே நாளில் ரூ.5,360 குறைந்து தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்தது. இந்நிலையில் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராமிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஆபரண தங்கம் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியை பொறுத்தவரை நேற்றைய தினம் கணிசமாக குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரு.260க்கும் பார் வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனையானது.

Tags : Chennai ,Iran ,US ,
× RELATED மார்ச்- 21: பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!