×

நெய்யூரில் காங். பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

குளச்சல், மார்ச் 21: நெய்யூர் பேரூர் காங். கட்சி சார்பில் 14 பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இலந்தவிளையில் பேரூர் தலைவர் ஹெர்மஸ் கிரகோரி தலைமையில் நடந்தது. வட்டார செயல் தலைவர் வேணுகோபால் போற்றி, பொருளாளர் பாக்கிய சாந்தகுமார், மாவட்ட செயல் தலைவர் செல்வ குமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருந்தன்கோடு மேற்கு வட்டார காங்.தலைவர் வழக்கறிஞர் ஜெயசிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். பூத் கமிட்டி நிர்வாகிகள் மில்கியாஸ், பாஸ்கர் ராஜ், ஸ்டீபன், பிரைட், சுரேஷ், விமல் சிங், ஜஸ்டின் ஆரீஸ்டர், நேச மனோகர், வழக்கறிஞர் லால், விசுவாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வாக்காளர் பட்டியல்கள் வழங்கப்பட்டது.

Tags : Neyyur Congress Booth Committee Executives ,Meeting ,Kulachal ,Neyyur Perur Congress ,Ilanthavilai ,Perur ,Hermes Gregory ,Regional Executive President ,Venugopal Pottri ,Treasurer ,Pakiya Shanthakumar ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...