×

எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வேலூர் கோர்ட் உத்தரவு கார் மீது பஸ் மோதி இறந்த

வேலுார், மார்ச் 21: காட்பாடி அருகே கார் மீது தனியார் பஸ் மோதி இறந்த எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. வேலுார் மாவட்டம் மேல்வடுகன்குட்டையை சேர்ந்தவர் யுவராஜ்(42), எலர்ட்ரீசியன். இவர் குடியாத்தம்- காட்பாடி சாலையில் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி காரில் சென்று கொண்டிருந்தார். கரசமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பஸ், யுவராஜ் கார் மீது எதிர்பாராாதவிதமாக மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில் கணவர் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி யுவராஜின் மனைவி வனிதா மற்றும் குழந்தைகள், வேலுார் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, மனுதாரரின் கணவர் இறப்புக்கு பஸ்சை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது உறுதியாகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.18 லட்சத்தை ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டியுடன் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Vellore Court ,Vellore ,Kadpadi ,Yuvraj ,Elerthrisian ,Velur District Upper Vadugankutta ,Kadpadi Road ,
× RELATED பாலியல் புகார் குழு அமைப்பது கட்டாயம்...