×

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் – வி.கே.சசிகலா இடையே தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் – வி.கே.சசிகலா இடையே தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. வி.கே.சசிகலா தொடங்கிய அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகமும், ராமதாஸ் தரப்பு பாமகவும் இணைந்து தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்; “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இனணந்து கூட்டணி அமைக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும்” என சசிகலா மற்றும் ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, “தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போதே இது பலருக்கும் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். எங்கள் கூட்டணியில் சேர விரும்புவோர் என்னிடமும், சசிகலா அம்மையாரிடமும் பேசலாம். அப்படி வரும் பட்சத்தில், நானும் சசிகலாவும் அம்மையாரும் இணைந்து அதுகுறித்து முடிவெடுப்போம்.

தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். சிலநேரங்களில் சில கால தாமதங்கள் நடப்பது உண்டு. அந்த வகையில், இந்த கூட்டணி கால தாமதம் ஆகியுள்ளது” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Ramadas ,Palamaka ,Thailapuram ,Sasikala ,Viluppuram ,K. ,All India Revolutionary Party ,Tamil Nadu ,Puducherry Assembly ,Ramdas Tarappu Pamaka ,
× RELATED 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!