×

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற விகேபுரம் தொழிலாளி மகனுக்கு பாராட்டு விழா

விகேபுரம்,மார்ச் 20: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்று சாதனை படைத்த பிஎல்டபிள்யுஎ பள்ளி முன்னாள் மாணவரும், விகேபுரத்தை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி மகனுமான சுப்பிரமணிய பாரதிக்கு (22) பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிச்செயலாளர் கோபால்சாமி தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியை முத்துசெல்வி வரவேற்றார். தலைமை ஆசிரியை மீனா முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்பாபு, மரிய அந்தோணி, ஜான் விக்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கந்தன் சாதனை மாணவர் குறித்து பாடினார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சுப்பிரமணிய பாரதி, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். என்சிசி முதன்மை அலுவலர் சங்கரசுப்பிரமணியன் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் பொன்னுசாமி தொகுத்து வழங்கினார்.

Tags : Vikepuram ,Subramania Bharathi ,PLWA School ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...