×

சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

கடையநல்லூர், மார்ச் 20: கடையநல்லூர் இக்பால்நகர் சிராஜுல் மில்லத் அறக்கட்டளை சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை தலைவர் காஜா மைதீன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு வர்த்தக அணி மாநில தலைவர் செய்யதுசுலைமான், மாவட்ட துணைத் தலைவர் அக்பர் அலி, முஸ்லிம் லீக் நகரத் தலைவர் நல்லாசிரியர் செய்யது மசூது, நகர செயலாளர் முஸ்தபா, துணை செயலாளர்கள் முகமது அலி, மஸ்தான், நகர பொருளாளர் பேட்டை ஜபருல்லா, கவுன்சிலர் சேக் உதுமான் செய்யதுஅலி பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டத்து சாகிபு அசன் மக்தூம் கிராத் ஓதினார். அறக்கட்டளை செயலாளர் முஹம்மது கோயா வரவேற்றார். நிகழ்ச்சியில் டாக்டர் சஞ்சீவி, பண்பொழி டாக்டர் நவாஸ்கான், சேயன்இப்ராஹிம், திமுக காதர், முஸ்லிம் லீக் முன்னாள் மாவட்ட செயலாளர் செய்யது மசூது, ஆடிட்டர் உஸ்மான் அலி, கலிவா சாகிப் கலீல், பசுலுத்தீன், காஜா மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இஸ்மத், பஇப்ராஹிம், நகரத் துணைத் தலைவர் முகமது ஹனிபா, தகவல் தொழில்நுட்ப மாநிலத் துணைத் தலைவர் கே .கே. அப்துல்லா, காயிதே மில்லத் மன்சில் முகமது மீரான் உட்பட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை பொருளாளர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.

Tags : Kadayanallur ,Kadayanallur Iqbalnagar Sirajul Millat Foundation ,President ,Kaja Maideen ,Seyadu Sulaiman ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...