×

சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து எதிரணியை டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

 

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாகமுகவர்கள், பிஎல் 2 பிடிஏ மற்றும் 10 பாக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆலந்தூர் வடக்கு, தெற்கு பகுதி செயலாளர்கள் பி. குணாளன், என்.சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வந்தே மாதரம், ஜி.கே.விவேகானந்தன், கண்டோன்மெண்ட் நகர செயலாளர் டி.பாபு, தொகுதி தேர்தல் பார்வையாளர் பத்மப்பிரியா முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ அன்பரசன் பேசியதாவது; காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம்.

பாக முகவர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்து பாக முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பாகம் முகவர் குறிப்பேடு புத்தகத்தில் வாக்காளர்கள் பற்றிய முழு விவரங்களை கைபேசி எண்ணுடன் குறிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் நம்முடைய கட்சியினுடைய சுவரொட்டிகள், விளம்பரங்கள் முக்கியமான இடங்களில் ஒட்டவேண்டும். நமது தலைவர் நேர்காணல் ஆரம்பிச்சிட்டாரு. அவரே சொல்லிட்டாரு, வேட்பாளர் பரிந்துரை பண்றதெல்லாம் மாவட்ட செயலாளர், மண்டல பொறுப்பாளர் எல்லாம் கிடையாது. வேட்பாளரை நானே முடிவு பண்ணுவேன். உங்களுடைய வேலை ஜெயிக்க வைக்க வேண்டியதுதான்.

234 தொகுதியிலும் நானே நிற்கிறேன். மு.க.ஸ்டாலின் தான் நிற்கிறேன். அவரை வெற்றி பெற வைக்கவேண்டிய வேலை மட்டும்தான் உங்க வேலை, மற்ற வேலையெல்லாம் நான் பார்த்துக்குறேன், அப்படின்னு சொல்லி முடிச்சிருக்கார். அதனால இங்கு வந்திருக்க கூடியவங்க எல்லாம் உற்சாகத்தோட தைரியமா போங்க. நிறைய வேலை செஞ்சிருக்கோம். நம்மள மாதிரி யாருமே செஞ்சிருக்க முடியாது.மக்கள் கேட்டதை செய்து கொடுத்துடுவோம். ஆகவே கடுமையா உழைச்சு இந்த தொகுதியில் எதிராளியை டெபாசிட் இழக்க வைக்கணும்.

இந்த தேர்தலில் எதிரணியினர் அயோக்கியத்தனம் செய்வார்கள். ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். ஒற்றுமையா வேலை பார்த்து வேகமா, பொறுப்பா வேலை பார்த்து ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.கே. இப்ராகிம், ஆர்டி.பூபாலன், ஆனந்தன், மாவட்ட வட்ட அணிகளின் அமைப்பாளர் ஜெயராம் மார்த்தாண்டன், ஜெயகரன், பாஸ்கரன், கே.ஆர்.ஆனந்தன், சாமுவேல், தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,Mo. Anbarasan ,Alandur ,PL2BDA ,Chennai Alandur Assembly Constituency ,Alandur North ,South ,B. Gunalan ,N. Moon ,Union ,Secretaries ,Vande Mataram ,
× RELATED சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 250...