கத்தார் : கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய LPG ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல், கடுமையான சேதத்தை விளைவித்துள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கில், கத்தாரையும் அதன் அண்டை நாடுகளையும் ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருவது கண்டிக்கத்தக்கது என கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
