மும்பை: தொடர்ந்து 3வது நாளாக பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 859 புள்ளிகள் உயர்ந்து 76,926 புள்ளிகளில் வர்த்தமாகி வருகின்றன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 259 புள்ளிகள் உயர்ந்து 23,840 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. டெக் மகேந்திரா, இன்போசிஸ், ஹெச்.சி.எல். டெக், டி.சி.எஸ். உள்ளிட்ட ஐ.டி. பங்குகள் விலை உயர்ந்து வர்த்தமாகி வருகின்றன.
