சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சென்னையில் நகை அடகு கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ‘அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு அரசியல் கட்சியினருக்கு முறைகேடாக உதவினால் உரிமம் ரத்து செய்யப்படும். அடகு வைத்த நகைகளை திருப்ப வாக்காளர்களுக்கு டோக்கன், அடையாள வில்லைகள் வழங்கினால் ஏற்கக் கூடாது. மொத்தமாக அடகு வைத்த நகைகளை திருப்ப எவரேனும் முற்பட்டால் தகவல் தர வேண்டும்’ என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
